மீண்டும் பிகினியில் நமீதா

By Staff

Namitha with Srikanth
ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழா படத்தில் பிகினி உடையில் வருகிறார் நமீதா.

முதல் படமான எங்கள் அண்ணாவில் மட்டும் நார்மலாக நடித்திருந்தார் நமீதா. ஆனால் அதன் பின்னர் முழுக் கவர்ச்சிக்கு மாறினார். இப்போது பிகினிக்கும் மாறி விட்டார்.

தற்போது சுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் பெருமாள் படத்தில் அவருக்கு ஜோடியாக திறமை காட்டி வரும் நமீதா, படப்பிடிப்புக்காக மொரீஷியஸில் படக்குழுவினரோடு முகாமிட்டிருக்கிறார். வின்சென்ட் செல்வாதான் இயக்குநர்.

படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில், நமீதா டூ பீஸ் உடையில் டூமச் கவர்ச்சியில் கலகலக்க வைக்கிறாராம். மொரீஷியஸ் கடல் அழகின் பின்னணியில் சுந்தர்.சியோடு கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட டூ பீஸ் உடையில் கிளாமர் களியாட்டமே போட்டுள்ளாராம் நமீதா.

ஏற்கனவே ஒரு படத்தில் டூ பீஸ் உடையில் வந்துள்ள நமீதா. இந்த முறை சற்றே கூடுதல் கவர்ச்சியாட்டம் போட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதைக் கேள்விப்பட்டதிலிருந்து இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதே ரேஞ்சுக்கு எங்களது படத்திலும் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று அன்புக் கோரிக்கை விடுக்கின்றனராம். அவரும் போனால் போகிறது, பரிசீலிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

இப்படத்தில் சுந்தர்.சி, காவல்துறை அதிகாரியாக வருகிறார். நடிக்க வந்த பின்னர் சுந்தர்.சி. காவல்துறை அதிகாரியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

படத்தில் மீனாட்சி இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கும் மொரீஷியஸ் பக்கம் வைத்து அழகான டூயட்டைப் படமாக்கியுள்ளனராம்.

என்னதான் மீனாட்சி கிளாமராக நடித்தாலும் நமீதாவுக்கு முன்னால் அது எடுபடுமா என்பது பெட்டிங் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X