கின்னஸ் சாதனை படத்திலிருந்து விலக்கப்பட்டார் நவ்யா!
கின்னஸ் சாதனைக்காக தயாராகும் படத்திலிருந்து விலக்கப்பட்டார் நவ்யா நாயர். அவருக்கு பதில் மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் ஒரு படம் தயாராகிறது. இதை கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சுரேஷ் ஜோகிம், ஆண்ட்ரூஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க முதலில் நவ்யா நாயர் ஒப்பந்தமானார். இப்போது அவர் நீக்கப்பட்டு, மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நவ்யா நாயர் கூறியதாவது: முதலில் அந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாகப் பேசினார்கள். ஆனால் திடீரென்று 'குறைந்த நாட்கள் நடித்தால்போதும். சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள்" எனக் கேட்டனர். அதற்கு ஒப்புக் கொள்ளாமல் படத்திலிருந்து விலகிவிட்டேன். எனக்கு பதிலாக மீரா ஜாஸ்மின் நடிப்பதாகக் கேள்விப்பட்டேன். இதில் எனக்கு எந்த வருத்தமோ கோபமோ கிடையாது.
மீரா எனது தோழிதான். நான் நடிப்பதாக இருந்த படத்தில் அவர் நடிப்பது பொருத்தமே, என்றார்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:
முதலில் உருவாக்கப்பட்ட கதைக்கு நவ்யா பொருத்தமாகத்தான் இருந்தார். ஆனால் இப்போது கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மீரா ஜாஸ்மின்தான் பொருத்தமாக இருக்கிறார். மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இல்லை. சம்பள விவகாரமெல்லாம கிடையாது. பேசியபடி கொடுக்கத் தயாராகவே இருந்தோம், என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











