'பையா'வுக்கு நயன் 'பை'

By Staff

Nayantara
இது அதிகாரப்பூர்வமான செய்தி... லிங்குசாமியின் பையா படத்திலிருந்து விலகிக் கொள்வதாக நடிகை நயனதாரா அறிவித்துள்ளார்.

லிங்குசாமி தயாரித்து இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோ கார்த்தி. இந்தப் படத்துக்காக நயனதாராவை ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்திருந்தார் லிங்கு. தமிழ் சினிமாவில் இது மிகப் பெரிய சம்பளம். எந்திரனில் ஐஸ்வர்யாராய் வாங்கியுள்ள சம்பளத்துக்குப் பிறகு பெரிய சம்பளம் இதுதான்.

ஆனால் இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகு வெளியான நயன்தாராவின் படங்கள் ஒன்று கூட ஓடவில்லை. வந்த வேகத்தில் பெட்டிக்குத் திரும்பிவிட, சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டார் லிங்குசாமி. ஆனால் நயனோ பேசின சம்பளம் பேசியதுதான் என பிடிவாதமாக நின்றார்.

இதற்கிடையே பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த லிங்குசாமி, இந்தப் படத்தின் நாயகி நயனதாராதான் என்றும் அவருக்கு சம்பளம் குறைக்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும், தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவிக்கு அடுத்து சிறந்த நடிகை நயனதாராதான் என்றெல்லாம் புகழாரம் சூட்டினார்.

அப்படிச் சொன்ன இரண்டே நாளில் படத்திலிருந்து விலகிவிட்டதாக நயன் அறிவித்துள்ளார்.

காரணம் என்ன?

"எனக்கு எவ்வளவு சம்பளம் என்று ஆரம்பத்திலேயே தெளிவாகப் பேசி ஒப்பந்தம் செய்துள்ளார் லிங்குசாமி. ஆனால் இப்போது சம்பளக் குறைப்பு குறைத்து பேச வேண்டும் என்கிறார். நான் எதற்காகக் குறைக்க வேண்டும்?

மேலும், ஹீரோயினாக என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு, இப்போது வேறு நாயகிகளிடம் என்னைப் பற்றி தாறுமாறாகப் பேசி வருகிறார் லிங்கு. இதற்கு மேலும் இந்தப் படத்தில் நீடிப்பது என் சுயமரியாதையைப் பாதிக்கும் என்பதால் படத்திலிருந்து விலகுகிறேன்' என அவர் அறிவித்துள்ளார்.

அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தை முறையிடலாமா, வேறு நாயகிகளைத் தேடலாமா என யோசித்து வருகிறார் லிங்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X