லிங்குச்சாமி யார் என் சம்பளத்தைக் குறைக்க? - நயன் பாய்ச்சல்!

By Staff

Nayanatara
எனது சம்பளத்தைக் குறைக்க லிங்குச்சாமி யார் என கேட்டுள்ளார் தடை விதிக்கப்பட்டுள்ள நயனதாரா.

லிங்குசாமி படத்தை ஆரம்பிப்பார் என்பதற்காக பொறுமையோடு காத்திருந்தேன். ஆனால் நான் கொடுத்த தேதிகள்தான் வீணாகின. கடைசியில் அவர்களாகத்தான் என்னை படத்திலிருந்து விலக்கினார்கள். இப்போது என் தேதிகளை வீணாக்கியதற்காக அட்வான்ஸில் ரூ.5 லட்சத்தை வேண்டுமானால் குறைப்பதாகக் கூறியுள்ளார். என் ரேட்டை நிர்ணயம் செய்ய லிங்குசாமி யார்? வீணான என் கால்ஷீட்டின் மதிப்பு தெரியுமா லிங்குசாமிக்கு? என கொதிக்கிறார் நயன்தாரா.

பையா படத்துக்காக லிங்குசாமி கொடுத்த அட்வான்ஸ் தொகையைத் தர மறுத்து, படத்திலும் நடிக்காமல் போனதற்காக நயன்தாராவுக்கு தமிழில் நடிக்கத் தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் கவுன்சில் மற்றும் நடிகர் சங்கம்.

பொதுவாக நயன்தாராவிடம் வேண்டி வேண்டிக் கேட்டாலும் பேட்டி கிடைக்காது. அந்தப் பேட்டியைப் பெறும் முன்பு ஏகப்பட்ட நந்திகளைத் தாண்டியாக வேண்டும். அப்படியே கொடுத்தாலும் அவருக்கென்று உள்ள சில 'ரசிகர் இணையதள'ங்களுக்கு மட்டும்தான் தருவார்.

இன்றோ கேட்கும் முன்பே பேட்டி கொடுக்கிறார் நயன். அப்படி அவர் கொடுத்த பேட்டி இது:

தயாரிப்பாளர் கவுன்சிலும், நடிகர் சங்கமும் எடுத்துள்ள முடிவு ஒரு தலைப்பட்சமானது... அநீதியானது. லிங்குசாமியிடம் நான் 20 லட்சம் ரூபாய் முன்பணமாகப் பெற்றது உண்மையே. ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட உடனே நான் எனது கால்ஷீட்டை அவர்களுக்குக் கொடுத்தேன்.அதுகுறி்த்த ஒப்பந்தம் கூட இருக்கிறது.

ஆனால் படத்தை ஆரம்பிக்காமல் அவர்கள்தான் தாமதம் செய்தனர். அவர்கள் கேட்டுக் கொண்டபடி செப்டம்பர் மாதமே தேதிகள் ஒதுக்கிக் கொடுத்தேன். ஆனால் அதை வீணடித்தது அவர்கள் தவறு. நானா நடிக்கமாட்டேன் என்று சொன்னேன்.

நானும் 3 மாதங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன். கடந்த டிசம்பர் மாதம் ஒருவழியாக போட்டோ ஷூட்டுக்கு அழைத்தார்கள். ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக என் சம்பளகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். அப்புறம் எதற்கு ஒப்பந்தம் போடுகிறார்கள்? எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட்ட பிறகு அந்தத் தொகையைக் குறைக்கச் சொன்னது நியாயமா?

நியாயமாக நான்தான் இந்த புகாரைக் கொடுத்திருக்க வேண்டும். பெருமந்தன்மையோடு நான் விட்டுவிட்டதற்கு தண்டனை இது.

என் கால்ஷீட்டை வீணாக்கியதற்காக கொடுத்த அட்வான்ஸில் 5 லட்சம் ரூபாயைக் குறைத்துக் கொள்வதாகவும் மீதியை நான் தந்துவிட வேண்டும் என்றும் லிங்குசாமி கூறியுள்ளார். என் கால்ஷீட்டின் மதிப்பை நிர்ணயிக்க லிங்குசாமி யார்? அந்த கால்ஷீட்டின் மதிப்பு தெரியுமா அவருக்கு?

என் நிலை இதுதான். படத்திலிருந்து நானாக விலகவில்லை. அவர்களாகத்தான் விலக்குவதாக அறிவித்தார்கள். எனவே அட்வான்ஸைத் திருப்பித் தரமுடியாது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கச் சொல்லி நடிகர் சங்கத்தில் முறையிட்டிருந்தேன். ஆனால் அவர்கள் எனக்கே எதிராகத் திரும்பியுள்ளனர். இந்த 15 லட்சம் ஒரு பொருட்டல்ல... ஆனால் இவர்கள் நடந்து கொண்ட விதம் உண்மையிலேயே என்னைக் கோபப்பட வைத்துள்ளது. அடுத்த நடவடிக்கை குறித்து யோசித்து வருகிறேன், என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X