கோலிவுட்தான் என் லட்சியம்! - நிக்கோல்

By Staff

Nicole
எல்லோருக்கும் இந்தி, தெலுங்கு படங்கள்தான் இலக்காக இருக்கும்... ஆனால் எனக்கு தமிழில் நடிப்பதுதான் முக்கியம் என்றார் நடிகை நிக்கோல்.

அடடா என்ன அழகு படத்தில் நடிக்கத் துவங்கிய நிக்கோல், இப்போது ஆறுமனமே உள்பட சில படங்களில் நடித்துவருகிறார்.

அதேநேரம் தெலுங்கு, கன்னட மொழிகளில் வரும் வாய்ப்புகளைத் தவிர்த்து வருகிறாராம்.

நான் அறிமுகமானது ஒரு கன்னடப் படத்தில்தான். பிறகுதான் தமிழ் வாய்ப்பு வந்தது. தமிழில் இன்னும் நான் டித்த படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் 2 புதுப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்.

வேறு மொழிகளில் வந்த வாய்ப்புகளை நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போது நடிக்கும் தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதற்காக காத்திருக்கிறேன். தமிழுக்குதான் முதலிடம்.

பொதுவாக நடிக்க ஆரம்பிக்கும் எல்லோருமே இந்திப் படங்கள் அல்லது தெலுங்குப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். அந்த நிலை மாறியிருக்கிறது. இப்போது இந்தி நடிகைகள் கூட தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். எனவேதான் இப்போதைக்கு தமிழில் முழுக் கவனமும் செலுத்த முடிவு செய்துவிட்டேன். இந்திப் பட வாய்ப்புகளை பின்னர் பார்த்துக்கொள்கிறேன், என்கிறார் நிக்கோல்.

ஜெய் ஆகாஷுடன் நடந்த மோதல் குறித்து கேட்டபோது, அது பற்றி மேலும் மேலும் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை.

ஆகாஷுடனான மோதல் முடிந்து விட்டது. என் விஷயத்தில் அவர் தலையிடத் தேவையில்லை. அதனால்தான் தேவையற்ற பிரச்சினைகளும் மனஸ்தாபங்களும். அவரும் இப்போது புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன் என்றார் நிகோல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X