ஐட்டம் வேண்டாம் ... மேக்னா

By Staff

Meghna Naidu
கலியோன் கா சமன் என்ற இசை ஆல்பத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர், மேக்னா நாயுடு.

ஒரு மனைவி இரு கணவன் என்ற 'படு வித்தியாசமான' கதையம்சம் கொண்ட படம்தான் இவரை வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்தியது.

டி.ஆரின் வீராசாமி மூலம் தமிழுக்கு வந்தார். ஓரிரு படங்களில் தலை காட்டினாலும் சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் அமையவில்லை. கடைசியாக வந்த வைத்தீஸ்வரனும் கை விரித்துவிட, இப்போது வருகிறதெல்லாம் வெறும் ஒற்றைப் பாடல் நடன வாய்ப்புகள்தானாம்.

"எத்தனையோ ஒற்றைப் பாடல் வாய்ப்புகளை மறுத்திருக்கிறேன். நல்ல நடிகை என்ற பெயரெடுக்க வேண்டும். அதனால் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் சவாலான கதாபாத்திரங்ளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

பணத்துக்காக எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் வந்துபோகும் எண்ணம் எனக்கில்லை.

ரசிகர்களை அழ வைப்பது எளிது. சிரிக்க வைப்பதுதான் கடினம். இப்போது அப்படி ஒரு நகைச்சுவைப் படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் விரும்பி எற்றுக் கொண்டிருக்கும் தொழில் நடிப்பு. இதில் என் முழுதிறமையும் காட்டி ஜெயிப்பேன் என்கிறார் மனம் தளராத மேக்னா நாயுடு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X