ரீமாவுக்கு பிஎம்டபிள்யூ!

கோலிவுட்டில் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் ஒரு பெருமை இருக்கும். சிலர் சொகுசு பங்களாக்களில் பெரிய இடத்தில் இருப்பார்கள். சிலர் வெளிநாட்டுக் கார்களை வைத்திருப்பதில் முன்னோடிகளாக இருப்பார்கள்.
இந்த நிலையில் அதி நவீன சொகுசுக் கார் வைத்திருப்போரின் பட்டியலில் புதிதாக ரீமா சென் இணைந்துள்ளார். கோலிவுட்டில் வெகு சிலரிடமே பிஎம்டபிள்யூ கார் உள்ளது. இப்போது அந்த வரிசையில் ரீமாவும் இணைந்துள்ளார்.
கரு நீல நிறத்திலான புதிய மாடல் பிஎம்டபிள்யூ காரை 2 வாரங்களுக்கு முன்பு மும்பை ஏஜென்ட் மூலமாக வாங்கியுள்ளாராம் ரீமா சென்.
காரை வாங்கியுள்ள ரீமா, அடுத்து சென்னையின் முக்கிய பகுதியில் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கப் போகிறார்.
நடிகைகள் வரிசையில் ரீமாவுக்கு இதில் 3வது இடம் கிடைத்துள்ளது. திரிஷாவும், நயனதாராவும் ஏற்கனவே இந்தக் காரை வைத்துள்ளனர். அதிலும் நயனதாரா, அவரே பிஎம்டபிள்யூவை படு வேகமாக ஓட்டி மகிழ்பவர்.
இவர்கள் தவிர சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களிடமும் பிஎம்டபிள்யூ உள்ளது.
தற்போது ரீமா சென், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் படு கலக்கலான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர இரு புதிய தமிழ்ப் படங்களும் கைவசம் உள்ளனவாம்.
புதுக் கார், புது வீடு, அடுத்து புது மாப்பிள்ளையா ரீமா?


Click it and Unblock the Notifications











