'ஆல் ரவுண்ட்' பூனம்!

தெனாவெட்டு படம் மூலம் தமிழில் ஹிட் ஆனவர் பூனம். அதன் பின்னர் மறுபடியும் ஜீவாவுடன் இணைந்து கச்சேரி ஆரம்பம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு விஷ்ணுவுடன் இணைந்து துரோகி படத்திலும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
இரு படங்களையும் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். தெலுங்கில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். அதேசமயம், தமிழில் எந்தவித இமேஜுக்குள்ளும் மாட்டாத வகையில் தனது கேரக்டர்களை செலக்ட் செய்கிறாராம்.
கவர்ச்சியும் இருக்கும், சீரியஸ் பாத்திரமும் இருக்கும், காமெடியும் இருக்கும். இப்படி கலந்து நடிப்பதையே தமிழில் விரும்புகிறேன். தமிழில் நான் இப்படித்தான் நடிப்பேன் என்று யாரும் எனக்கு முத்திரை குத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
எப்படிப்பட்ட கேரக்டரிலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறேன். அப்படித்தான் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சியமும் கூட என்கிறார் பூனம்.


Click it and Unblock the Notifications











