லாரன்ஸ் ஜோடி சதா?

வடிவேலுவை ஹீரோ ஆக்கிய சிம்புதேவன் அடுத்து இயக்கப் போகும் படத்தில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க காமெடிப் படமாக இருக்காது. மாறாக காமெடியும் கதையில் முக்கியப் பாத்திரத்தில் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளாராம் சிம்புதேவன்.
கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தில் ஹீரோயினாக நடிக்க சதாவை அணுகியுள்ளனர். சதா தற்போதைக்கு கைவசம் படம் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.
இருப்பினும், லாரன்ஸுடன் ஜோடியாக நடிக்க அவருக்கு தயக்கமாக இருக்கிறாராம். யோசித்து சொல்வதாக கூறி வைத்துள்ளார்.
அவர் கால்ஷீட் கிடைப்பது சந்தேகம் என்பதால் இந்தி நடிகை அஞ்சலி அலக்கையும் கேட்டு வைத்துள்ளனர். இவர்கள் தவிர வேறு சில நடிகைகளையும் அணுகியுள்ளனராம்.
இவர்களில் யார் கிடைத்தாலும், அவரை லாரன்ஸுக்கு ஜோடியாக்கி விட தீர்மானித்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











