சதா-ஷமிதாவுடன் 'மேடி'!

மாதவன் அடுத்து நடிக்கவுள்ள படம் நான் அவள் அது. தெலுங்குப் பட இயக்குநர் கோனா வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். இதில் மாதவனுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் சதா, இன்னொருவர் ஷமீதா ஷெட்டி.
மாதவனுடன் சதா ஜோடி சேருவது இது 3வது முறை. இதற்கு முன்பு இருவரும் இணைந்து இரு படங்களும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றன, வசூலிலும் சொல்லிக்கொள்ளும்படி கல்லாக் கட்டின.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக சதாவும், மேடியும் ஜோடி சேருகின்றனர்.
'பிக்' ஷில்பா ஷெட்டியின் தங்கச்சிதான் ஷமீதா ஷெட்டி. ஏற்னவே ஒருமுறை தமிழுக்கு வந்த அனுபவம் உடைய ஷமீதா, இப்போது மாதவனுக்காக 2வது முறையாக தமிழில் நடிக்க வந்துள்ளார்.
இது ஒரு முக்கோண காதல் கதை என்கிறார் கோனா வெங்கட். தற்போது கை நிறைய இந்திப் படங்களை வைத்துள்ள மாதவன், இப்படத்தின் கதையைக் கேட்டு இம்ப்ரஸ் ஆகி நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
தமிழ் உள்பட எந்த மொழிப் படத்திலும் வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சதா, மாதவனுடன் நடிக்கவுள்ள இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











