ஷ்ரேயாவுக்கு அம்மா!-பொங்கிய ஸ்னேகா!

By Staff

Sneha and Balakrishna
சரத் சாருக்கு ஜோடியாக நடிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை, ஆனால் என் வயதுப் பொண்ணுக்கு என்னை அம்மாவாக நடிக்கக் கேட்பது சரியா... என்று கோபத்துடன் நியாயம் கேட்கிறார் புன்னகை இளவரசி ஸ்னேகா.

சரத் தற்போது நடித்து வரும் 1977-க்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சரத்துக்கு இரு வேடங்கள். வயதான சரத்துக்கு ஜோடி ஸ்னேகா, இளமையான இன்னொரு சரத்துக்கு ஜோடி ஷ்ரேயா என்று பேசப்பட்டது.

ஆனால் திடீரென்று சரத்-ஸ்னேகாவின் மகளாக ஷ்ரேயா நடிக்கிறார் என செய்தி வெளியானது. அடுத்த இரு தினங்களிலேயே அந்தப் படத்திலிருந்து ஸ்னேகா விலகிவிட்டார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.

என்னதான் நடந்தது இந்தப் பட விவகாரத்தில்?

இது குறித்து ஸ்னேகா கூறுகையில்,

முதலில் என்னிடம் சரத்துக்கு ஜோடியாக நடிக்க சம்மதமா என்றார்கள். ரவிக்குமார் சார் படம் வேறு. ஏற்கெனவே கொடுத்த கால்ஷீட்டுகளை அட்ஜெஸ்ட் பண்ணி ஒப்புக் கொண்டேன். திடீரென்று இன்னொரு நாயகி நடிப்பதாகக் கூறினார்கள். அதற்கும் ஒப்புக் கொண்டேன்.

ஆனால் திடீரென என் வயதுக்கு இணையான ஒரு நடிகைக்கு (ஷ்ரியா) என்னை அம்மாவாக நடிக்கச் சொல்வது ரொம்ப ஓவரில்லையா... அதனால் மேற்கொண்டு எந்த மனக்கசப்பும் வராமலிருக்க விலகிக் கொண்டேன்.

நானும் சின்னப் பொண்ணுதான். அதற்கேற்ற வேடங்கள் செய்தால்தானே நன்றாக இருக்கும்... ஆனால் இதே ரவிக்குமார் சாரின் இன்னொரு படத்தில் நான் கதாநாயகியாக நடிக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

சினிமாவில் யாருடனும் எனக்கு பகையோ கசப்போ கிடையாது. அப்படியே வந்தாலும் அதை நட்பாக மாற்றிக் கொள்வேன் என்றார்.

சிம்பு படத்தில் நடிக்கிறீர்கள். அவருக்கு ஜோடியாகயாகவா அல்லது... அல்லது அவருக்கு அத்தை வேடத்திலா?

அய்யோ, தாங்க முடியல... நிறைய இடத்துல இப்படி கேட்டே காலி பண்ணிட்டாங்க. சிம்புவுக்கு ஜோடியாகத்தான் நடிக்கிறேன். இதுக்கு முன்னாடி வந்த செய்தியை இந்தப் படத்தோடு போட்டுக் குழப்பிட்டாங்க. அந்தப் படத்துல நானும் ஒரு கதாநாயகி என்றார் ஸ்னேகா.

சின்னப் பொண்ணு மனசை ரொம்பவே நோகடிக்காதீங்கப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X