அடி தடி - அட்டாக் - சினேகா!

ஆக்ஷன் ரோல்களில் நடிப்பது என்பது நடிகர்களுக்கு மட்டுமே உரித்தான கனவு அல்ல. சில நடிகைகளும் கூட ஆக்ஷன் ரோல்களில் அதகளப்படுத்த துடிப்பது உண்டு.
சிலர் அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடித்தும் பார்த்துள்ளனர். இருந்தாலும் விஜயசாந்தி ஒருவர்தான் ஆக்ஷன் ரோல்களில் அமர்க்களப்படுத்திய ஒரே நடிகை.
இந்த நிலையில் விஜயசாந்தி நடித்து, அவருக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்த வைஜெயந்தி ஐபிஎஸ் படம் தமிழில் மீண்டும் ரீமேக் செய்கிறார்கள். ஏற்கனவே இப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் ஆன படம் என்பது நினைவிருக்கலாம்.
இந்த புதிய ரீமேக்கில், விஜயசாந்தி நடித்த அடிதடி கேரக்டரில் சினேகா நடிக்கவுள்ளார். மலையாள மற்றும் தமிழில் பிசியாக இருக்கும் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் இப்படத்தின் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இப்படத்துக்காக சினேகா சில சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளாராம். தோற்றப் பொலிவுக்காகவும், உடல் கட்டுக்காகவும், டயட்டுக்கும் மாறவுள்ளாராம்.
படத்தில் சினேகாவுக்கு 'ஸ்னேக்' சினேகான்னு பெயர் வைப்பாங்களா?


Click it and Unblock the Notifications











