கிளாமர் பிடிக்கலை ..ஸ்வேதா

By Staff

Swetha
ஷீலாவின் கிளாஸ்மேட் ஸ்வேதா இப்போது நாயகியாகியுள்ளார். ஆனாலும் கிளாமர் வேடங்களில் நடிக்க முடியாது என்ற பிடிவாதத்தில் இருப்பதால் அவரைத் தேடி கமர்ஷியல் பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லையாம்.

சிறுமியாக நடித்துப் புகழ் பெற்றவர்கள் ஷீலாவும், ஸ்வேதாவும். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இன்று ஷீலா, நாயகியாகி விட்டார். தெலுங்கில் கிளாமர் கலந்து கதாபாத்திரங்களாக கேட்டு வாங்கி நடித்து வருகிறார். கன்னடத்திலும் பிசியாகவே உள்ளார்.

ஆனால் ஸ்வேதாவைத்தான் இதுவரை எந்தப் படத்திலும் காண முடியாமல் உள்ளது. காரணம், ஸ்வேதாவின் பாலிசி.

மல்லி, குட்டி, ஆயிஷா என தொடர்ந்து ஆர்ட் படங்களிலேயே அதிகம் நடித்தவர் ஸ்வேதா. இப்போதும் அவருக்கு ஆர்ட் படங்களில்தான் ஆர்வம் அதிகமாம்.

கமர்ஷியல் படங்கள் நிறைய வந்தன. ஆனால் கிளாமர் கேட்கிறார்கள். அது என்னால் முடியாது. அது எனக்குப் பிடிக்கவில்லை. இதனாலேயே பல படங்களை மறுத்து விட்டேன் என்கிறார் ஸ்வேதா.

ஸ்வேதா தற்போது புலம் ஈழம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது இலங்கையை கதைக் களமாக கொண்ட படம். கலைவேந்தன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் நடிக்கும் அனைவருமே ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளது இதன் விசேஷம்.

தற்போது பி.டெக் படித்து வரும் ஸ்வேதா, கிளாமர் தவிர்த்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார் புன்னகையுடன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X