நான் அதிரடி ஆளு-சுஹானி
நான் ஒரு அதிரடியான ஆளு என்கிறார் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ள புதிய கவர்ச்சிப் புயல் சுஹானி.
இரண்டு முகம் படத்தில் அறிமுகமாகியுள்ள சுஹானி அதிரடியாகப் பேசுகிறார். அடுத்து நடித்துள்ள அப்பாவி படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இரண்டு முகம் படத்தில் தனக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருப்பதாக கூறும் சுஹானி, தமிழ் சினிமாவில் முத்திரை பதிப்பேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
நடிப்போடு படிப்புக்கும் முக்கியத்துவம் தருகிறார் சுஹானி. அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு படிப்பை படிக்கிறார். ஏற்கனவே பி.காம் முடித்துள்ள சுஹானி அடுத்து பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பை தேர்வு செய்துள்ளார். அதுவும் சென்னையிலும், புனேவிலுமாக என இரண்டு படிப்பை.
சென்னையில் எம்.பி.ஏ படிக்கப் போகிறேன். புனேவில் டிப்ளமோ படிக்கப் போகிறேன் என்கிறார் சிரித்தபடி. ஏன் இப்படி ஒரே நேரத்தில் இரண்டு, நேரம் போதுமா என்று கேட்டால், எனக்கு வருடம் பூராவும் படப்பிடிப்பு இருக்கப் போவதில்லை. வருடத்திற்கு 1 அல்லது 2 படங்களில்தான் நடிக்கப் போகிறேன். அதிகபட்சம் போனால் ஒரு மாதம் போதும் படிக்க.
நான் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனை போல. எனக்கு ஒரு மாதம் மட்டும் போதும், அட்டகாசமாக படித்து முடித்து விடுவேன். சும்மா இல்லை, நல்ல மார்க்கும் எடுக்க முடியும் என்னால். பி.காமில் நான் 84 சதவீத மார்க் வாங்கி தேறியுள்ளேன். எனவே இரண்டு படிப்பை படிக்க எனக்கு எந்த சிரமமும் இல்லை என்கிறார் சுஹானி.
ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சவாரி செய்ய சுஹானியே ஆர்வமாக உள்ளபோது நாம் மட்டும் அதற்கு ஆட்சேபிக்க முடியும்? நல்லா நடிங்க, நல்லா படிங்க என்று வாழ்த்தி வைப்போம்!


Click it and Unblock the Notifications











