த்ரிஷாவின் புதுமுடிவு

By Staff

Trisha
பார்ட்டிக்குப் போகாம இருக்க முடியலியே...-த்ரிஷா

சாயங்காலம் ஆனா பார்ட்டிக்குப் போகாமல் இருக்க முடியல, என்று புலம்பத் தொடங்கிவிட்டாராம் த்ரிஷா.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த த்ரிஷாவை இறக்கிவிட்டு அந்த இடத்தில் இப்போது உட்கார்ந்து கொண்டிருப்பவர் நயன்தாரா.

தனது இந்த நிலைக்குக் காரணம் உடல் தோற்றத்தில் தெரியத் தொடங்கியுள்ள தளர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட த்ரிஷா, தனக்கு வேண்டிய அழகியல் நிபுணரைக் கலந்தாலோசித்தாராம்.

தொடர்ந்து தீவிர உடற்பயிற்சியில் இறங்குவதுதான் ஒரே வழி என்று நிபுணர் சொல்லிவிட இப்போது, அழகை மேம்படுத்தும் உணவுகள், உடற்பயிற்சிகள் என த்ரிஷா மும்முரமாகிவிட்டாராம்.

ஆனாலும், அழகு நிபுணர் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் அவரால் கடைப்பிடிக்க முடியவில்லையாம். அது மாலை நேர விருந்துகள் மற்றும் டிஸ்கொத்தேக்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பது.

இந்த விருந்துகளுக்குப் போவதால் தூக்கம் கெடுகிறது. அதுவே அழகையும் கெடுக்கிறது, என நிபுணர் சொன்னதைக் கடைப்பிடிக்க முடியாமல் தவிக்கிறாராம் அம்மணி.

படத்துக்குப் படம் ஒரே மாதிரி கவர்ச்சியாக நடிப்பதும் தனது கேரியரில் ஏற்பட்ட தொய்வுக்குக் காரணம் எனப் புரிந்து கொண்ட த்ரிஷா, இனி வரும் படங்களில் கவர்ச்சித் தோற்றத்துக்கு கடிவாளம் போடும் முடிவிலிருக்கிறாராம்.

அடுத்து வெளிவரும் அபியும் நானும், சென்னையில் ஒரு மழைக்காலம் இரண்டிலுமே த்ரிஷாவுக்கு கவர்ச்சியில்லாத கண்ணிய வேடம்தானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X