பாங்காக்கில் தவித்த த்ரிஷா!

By Staff

Trisha
தாய்லாந்து புரட்சிக்காரர்கள் பாங்காக் விமான நிலையத்தை அதிரடியாக மூடியதால், நடிகை திரிஷா சென்னை திரும்ப முடியாமல் தாய்லாந்தில் தவித்தார்.

தாய்லாந்து பிரதமர் சோம்சாய் முறைகேடுகளில் ஈடுபட்டதால், அவர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். பாங்காக் விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டார்கள்.

அதைத் தொடர்ந்து பாங்காக் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்து எந்த விமானமும் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை.

இந்த விவரம் தெரியாமல், திரிஷா - நாகார்ஜூனா நடிக்கும் கிங் என்ற தெலுங்கு படப்பிடிப்பு குழு, அங்கு படப்பிடிப்பு நடத்தியது. பாங்காக்கில் உள்ள கிரபி ஐலண்ட் என்ற இடத்தில் இந்தப் படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரிஷா, நாகார்ஜுன், டைரக்டர் சீனு ஒயிட்லா ஆகிய மூவரும் இந்தியா திரும்புவதற்காக பாங்காக் விமான நிலையத்துக்கு வந்தார்கள்.

அப்போதுதான் விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் 3 பேரும் தவித்தார்கள். அவர்களை திரும்பிச் செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டார்கள்.

இதுகுறித்து த்ரிஷா கூறியிருப்பதாவது:

பாங்காக்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் விமான நிலையம் மூடப்பட்ட விவரம் எங்களுக்கு தெரியாது. இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வேறு வழியின்றி மீண்டும் பாங்காக் நகருக்கு திரும்பிப்போய், அங்கிருந்து கார் மூலம் புக்கட் தீவுக்கு வந்தேன். புக்கட்டில் இருந்து விமானம் மூலம் கோலாலம்பூர் வந்து, அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தேன் என்றார் திகில் நீங்காத முகத்துடன்.

இப்படித்தான் பாவனா அன் கோ சமீபத்தில் பாங்காக்கு தெலுங்குப் படப்பிடிப்புக்காக போனபோது தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.

கொஞ்ச நாளைக்கு பாங்காக் பக்கம் பாயை வைத்துப் படுக்கக் கூடாது போலும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X