வேடப்பன்: ஒரு நடிகையும் அவர் ரசிகனும்!

By Staff

Nikitha
நடிகை மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு ரசிகன், அந்த நடிகை பற்றி தவறாகப் பேசும் ஒருவனைக் கொல்ல முயர்சிக்கிறான். பின்னர் ஊர் மக்கள் சமாதானப்படுத்த, அதே கோபத்துடன் கோடம்பாக்கத்துக்குப் போய் அந்த நடிகையையே கொன்றுவிடத் துடிக்கிறான்...

-இப்படி ஒரு கோணத்தில் கதை சொல்ல வருகிறார் இயக்குநர் ஆனைவாரி ஏ ஸ்ரீதர். படத்தின் பெயர் வேடப்பன்.

அரிசி வியாபாரியாக இருந்து சினிமா மீது கொண்ட தீராத காதலில் சினிமா எடுக்க வந்திருக்கும் பி.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள முதல் படம்.

பொதுவாக படத்துவக்க விழாவை ஆடம்பரமாகச் செய்து பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு எடுக்கப் போகிற கதை பற்றி பேட்டி தருவார்கள். ஆனால் ராதா கிருஷ்ணன், படத்தை முழுமையாக முடித்துவிட்டு, 'வேடப்பன் படத்துக்கு விழா' என ஒரு நிகழ்வை நடத்தி முடித்தார்.

"படம் முழுமையாக முடிந்துவிட்டது. இந்த மாத இறுதியில் வெளியாகிவிடும். வசூல் என்ற படத்தில் நடித்த ஹேமந்த்குமார் நாயகனாக நடிக்கிறார். அப்சரா, நிகிதா என இரண்டு புதிய முகங்களை அறிமுகப்படுத்துகிறோம்.

நல்ல கதை. சிறப்பாக, குறித்த காலத்துக்குள் (30 நாட்கள்) எடுத்து முடித்துள்ளார் புதிய இயக்குனர் ஸ்ரீதர். இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்... இன்னும் நிறைய படம் எடுத்து நிறைய பேருக்கு வேலை கொடுக்க உதவும்" என்றார் ராதாகிருஷ்ணன்.

மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, நேசன் இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு நெல்லை சுந்தரராஜன். அவரது உதவியாளர் ஆறுமுகம்தான் இந்தப் படத்தின் நாயகிகளைத் தேடிப் பிடித்தாராம்.

படத்தின் நாயகிகளில் ஒருவரான அப்ஸராவுக்கு சொந்த ஊர் பெங்களூர். ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்துள்ளாராம். கவர்ச்சிக் கலைச்சேவையே தன் நோக்கம் என்றார்.

'நல்ல' நோக்கம்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X