அஞ்சலியை கைவிட்ட கவர்ச்சி!

Anjali
கவர்ச்சிகரமாக நடித்துப் பார்த்தும் தேறாததால், அஞ்சலியைத் தேடி எந்தப் புதிய வாய்ப்பும் வரவில்லையாம். வந்த ஒரு வாய்ப்பும் வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டதாம்.

நடிப்பு வருதோ இல்லையோ, பீலா நன்றாக வரும் நம்ம ஊர் நடிகர், நடிகையர் சிலருக்கு. கையில் ஒரு படமும் இருக்காது. இருந்தாலும், நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன், அந்தப் படத்தில் நடிக்கிறேன், ரொம்ப பிசி என்று அளந்து விடுவதில் அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.

அப்படித்தான் கூறிக் கொண்டிருக்கிறாராம் அஞ்சலி. கை நிறையப் படங்கள் இருப்பதாக வெளியில் கூறிக் கொண்டிருக்கிறாராம். ஆனால் உண்மையில் அவர் கைவசம் புதிய படம் எதுவும் இல்லை என்கிறது தகவல் அறிந்த வட்டாரம்.

கற்றது தமிழ் படம் மூலம் அழகான பெண்ணாக நடிப்பில் பரிமளித்த அஞ்சலி, அடுத்து அதிரடியாக கவர்ச்சிக்கு மாறினார். அந்தக் கவர்ச்சி அவருக்கு கை கொடுக்கவில்லை. அவருடைய உடல் அமைப்புக்கு கவர்ச்சி பொருத்தமாக இல்லை என்று முத்திரை குத்தி விட்டனர்.

அஞ்சலி நடித்துள்ள அங்காடித் தெரு படம் முடிந்து விட்டாலும் கூட எப்போது ரிலீஸாகும் என்று யாருக்குமே தெரியவில்லை.

இந்த நிலையில், என் கனவு நீதானடி என்ற படத்தில் அஞ்சலியை புக் செய்தார் இயக்குநர் களஞ்சியம். என்ன காரணமோ தெரியவில்லை இப்போது அஞ்சலி படத்தில் இல்லையாம்.

இதுகுறித்து அஞ்சலியிடம் கேட்டால், நானாகத்தான் விலகிக் கொண்டேன், படப்பிடிப்பைத் தொடங்க தாமதம் செய்தார்கள். எனவே விலகிக் கொண்டேன் என்கிறார். ஆனால் அஞ்சலியை நீக்கி விட்டதாக இன்னொரு தகவல் கூறுகிறது.

இருந்தாலும் சற்றும் கலங்காத அஞ்சலி கை நிறையப் படங்களுடன் பிசியாகத்தான் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X