ஒரே எடையுடன் டிரிம்மாக இருக்கும் திரிஷா!

By Sudha

நடிகர், நடிகைகளுக்கு எடையை மெயின்டெய்ன் செய்வது ரொம்ப அவசியம். காரணம், சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். எனவே உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்வதில் செம ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் நடிகர்களுக்கு.

நடிகர்கள் பெரும்பாலும் உடல் வனப்பையும், கட்டையும் பேணுவதில் மெனக்கெடுவது சகஜம். ஆனால் நடிகைகள் விஷயத்தில் பெரும்பாலானோர் அப்படி இருப்பதில்லை. ஓரளவு எடை கூடாமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால் திரிஷா விஷயத்தில் அப்படி இல்லை. கடந்த சில வருடங்களாகவே அவர் ஒரே எடையுடன்தான் இருக்கிறாராம். அந்த அளவுக்கு கடுமையாக உடல் எடையை கட்டுக்குள் வைத்து வருகிறாராம்.

தேவையில்லாததை சாப்பிடுவது, உடல் எடையைக் கூட்டக் கூடிய உணவு வகைகளை தொடாதது, உடற் பயிற்சியில் தீவிர கவனம் செலுத்துவது என்று கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறாராம்.

இதனால்தான் கடந்த சில வருடங்களாகவே அவரது உடல் எடை கூடாமல் தொடர்ந்து அப்படியே இருக்கிறதாம். இதனால்தான் இளம் வயது ஹீரோக்கள் என்று மட்டுமல்லாமல் கமல்ஹாசன் போன்ற சீனியர்களுடனும் நடிக்கும் வாய்ப்பு லாவகமாக அவருக்கு கை கூடுகிறதாம்.

தமிழ் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களில் ஒருவரான கமலுடன் நடித்து விட்ட திருப்தியில் இருக்கும் திரிஷா, அடுத்து ரஜினியுடன் நடிக்கப் போகும் தருணத்திற்காக காத்திருக்கிறார். விரைவில் அந்த ஆசையும் பூர்த்தியாகவுள்ளதால் பூரிப்பாக உள்ளாராம்.

பூரிப்பு உடல் எடையைக் கூட்டி விடாமல் பார்த்துக்கோங்க திரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X