தமிழுக்கு வருவாரா சோனம் கபூர்?

இந்தியில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக கலக்கியவர் அனில் கபூர். இவரது மகள்தான் சோனம் கபூர். இந்தியில் முன்னணிக்கு வர முயன்று கொண்டிருக்கும் இளம் நாயகி.
சாவரியா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானவர் சோனம் கபூர். இப்போது இவரை தமிழுக்கும் அழைத்த வர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். 'அஞ்சாதே" அஜ்மல் நாயகனாக நடிக்கவுள்ள படம் கருப்பம்பட்டி. இதில் அஜ்மலுக்கு இரட்டை வேடம். இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான பிரபுராஜ சோழன் இப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தில் தான் நாயகியாக நடிக்க சோனம் கபூரை அணுகியுள்ளனராம். இதுவரை சோனம் கபூரிடமிருந்து பதில் ஏதும் வந்த்தாகத் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிகள் தொடர்ந்து வருகிறதாம்.
கருப்பம்பட்டி படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் பெங்களூரில் தொடங்குகிறதாம். தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வைத்து ஷூட் செய்யவுள்ளனர்.
தமிழ்ப் படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் கண்ணன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
1970ம் ஆண்டு தொடங்கி 2010ம் ஆண்டு முடிவது போல இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











