போதும் சினிமா!- பாரதி

By Staff

Bharathi
சினிமாவிலிருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார் நடிகை பாரதி.

அம்முவாகிய நான், நெஞ்சத்தைக் கிள்ளாதே படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் பாரதி.

அம்முவாகிய நான் படத்துக்குப் பிறகு பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் இந்தப் படத்துக்குப் பின் அவர் நடித்த இரு படங்கள் ஓடவில்லை. நடித்துக் கொண்டிருக்கும் சற்று முன் கிடைத்த தகவல் படமும் ஓடுகிற வழியைக் காணோம்.

இடையில் அடிதடி, தகராறு, போலீஸ் கேஸ் என அலைச்சல். இதனால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துவிட்டார்.

அவர் கூறுகையில்,

அம்முவாகிய நான் படத்தில் நடித்தேன் என்பதைத் தவிர சினிமாவில் சாதிக்க முடியவில்லை. பிறகு நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே நல்ல கதை. படம் சரியாக போகவில்லை.

சற்று முன் கிடைத்த தகவல் படம் இயக்குனர் மாறி இப்போது ரெடியாகியிருக்கிறது.

நிறைய இயக்குநர்கள் நிறைய கதைகளோடு வருகிறார்கள். எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருக்கிறேன்.

சினிமா ரொம்ப நாளைக்கு கைகொடுக்காது; படிப்பை முடி என்று பெற்றோர்கள் கூறிவிட்டார்கள். அதனால் விட்டுப்போன படிப்பை தொடர இருக்கிறேன். முன்பு ஓவியம் கற்றேன். இப்போது அதைத் தொடர்ந்து கற்று அந்த பாதையில் திரும்ப இருக்கிறேன். இருந்தாலும் நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்றார் பாரதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X