ராவணன் படத்திலிருந்து பிபாஷா நீக்கம்!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பெரும் நடிசத்திரப் பட்டாளம் நடிக்கும் ராவணன் படத்தில் சில வாரங்களுக்கு முன் திடீரென ஒப்பந்தம் செய்யப்பட்டார் நடிகை பிபாஷா பாசு. இவரை மண்டோதரியை உருவகப்படுத்தும் பாத்திரத்துக்கென தேர்வு செய்தாராம் மணிரத்னம்.
இவரை வைத்து சில காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், திடீரென நீக்கியுள்ளார் இயக்குநர். வழக்கம்போல ஏன் இந்த நீக்கம் என்றும் அவர் காரணம் தெரிவிக்கவில்லை.
யூனிட்டில் உள்ள ஒருவர் சொல்லித்தான் பிபாஷாவுக்கு விஷயம் தெரியுமாம். இதனால் பெரும் வருத்தத்தில் மூழ்கிவிட்ட பிபாஷா, "என்னுடைய பெரிய கனவு ஒன்று தகர்ந்துவிட்டதைப் போல உணர்கிறேன்.." என்று பேட்டியளித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications