துபாய் ஓட்டல் அதிபரை மணக்கும் செலீனா!

பெரோஸ்கானால் அறிமுகப்படுத்தப்பட்டவர் செலீனா. ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் வென்றவர். உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்றார்.
ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். செலீனா ஜெட்லிக்கும் துபாய் ஓட்டல் அதிபர் பீட்டர் ஹாக்குக்கும் சில மாதங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள செலீனா வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் பெரிய விளம்பரமின்றி நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரு வீட்டாரும் இந்தத் திருமணத்தைப் பேசி முடித்துள்ளனராம்.
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பு, பேஷன் உலகில் வலம் வருவேன் என்கிறார் செலீனா.
Comments


Click it and Unblock the Notifications