சாயா சிங்குக்கு கல்யாணம்!

திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மூலம் படு பிரபலமாகி, பின்னர் அதே வேகத்தில் காணாமல் போனவர் சாயா சிங்.
வல்லமை தாராயோ படத்தில் மீண்டும் நடிக்க வந்தாலும், பெரிய வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது அவர் கைவசம் ஒரே ஒரு படம் மட்டும்தான் உள்ளது. அது ஷங்கர் தயாரிப்பில் நாகா இயக்கும் அனந்தபுரத்து வீடு.
இப்போது இந்தப் படம் முடிந்த கையோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் சாயா. அவருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த இரும்பு - ஹார்டுவேர் வர்த்தகர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு நடிப்பைத் தொடர்வார் சாயா என முன்கூட்டியே தெரிவித்துள்ளார் சாயாவின் அம்மா.
Comments


Click it and Unblock the Notifications