twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாயா சிங்குக்கு கல்யாணம்!

    By Staff
    |

    Chaya Singh
    நடிகை சாயா சிங்குக்கு விரைவில் டும்டும் கொட்டத் தயாராகிவிட்டனர் அவரது பெற்றோர். ஹைதராபாத்தைச் சேர்ந்த இரும்பு வர்த்தகரைத் திருமணம் செய்கிறார்.

    திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மூலம் படு பிரபலமாகி, பின்னர் அதே வேகத்தில் காணாமல் போனவர் சாயா சிங்.

    வல்லமை தாராயோ படத்தில் மீண்டும் நடிக்க வந்தாலும், பெரிய வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது அவர் கைவசம் ஒரே ஒரு படம் மட்டும்தான் உள்ளது. அது ஷங்கர் தயாரிப்பில் நாகா இயக்கும் அனந்தபுரத்து வீடு.

    இப்போது இந்தப் படம் முடிந்த கையோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் சாயா. அவருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த இரும்பு - ஹார்டுவேர் வர்த்தகர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    திருமணத்துக்குப் பிறகு நடிப்பைத் தொடர்வார் சாயா என முன்கூட்டியே தெரிவித்துள்ளார் சாயாவின் அம்மா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X