நித்தியானந்தா விவகாரம்- நடிகை ரஞ்சிதாவை விசாரிக்க கோவை போலீஸ் முடிவு

கோவை கணபதி பூசாரிபாளையம் மணியகாரன் பாளையத்தை சேர்ந்த டி.எம்.விஸ்வநாத் என்பவர், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ஆன்மிகத்தின் பெயரால் நித்யானந்தா பொது மக்களை நம்ப வைத்து அவர்களிடமிருந்து காணிக்கை, நன்கொடை மற்றும் கட்டணம் ஆகிய வழிகளில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு பணம் வசூலித்து அதனை தன் சுயலாபத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்.
கோவை மாநகரில் பகவத் கீதை சத் சங்கம்' என்ற பெயரில் பெரிய அளவிலான பொருட்செலவில் முகாமை நடத்தி பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே நித்யானந்தாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420 (மோசடி), 295 ஏ (மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாக சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனராம். ரஞ்சிதா இருக்கும் இடம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் நேற்று மாலை நித்யானந்தா ஆசிரம வக்கீல் ஸ்ரீதர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நித்யானந்தா சுவாமிகள் தலைமறைவாகவில்லை. அவர் 18-ந் தேதிக்கு பிறகு சென்னை வருவார் என்றார்.
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை வக்கீல் ராஜலட்சுமி என்பவர் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
ரஞ்சிதா மீது குவியும் புகார்கள்...
இந்த நிலையில் நேற்று ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இருவர் புகார் செய்தனர்.
இதுகுறித்து பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில்,
நித்யானந்தா, நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிட்டது, பிளஸ்-2 பரீட்சை எழுதும் மாணவ-மாணவிகளை பெரிதும் பாதித்து விட்டது. எதிர்காலத்தில் இது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிடாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போல் தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அதன் மாநில செயலாளர் சபீர் என்பவர் கொடுத்த புகாரில், நடிகை ரஞ்சிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications











