'50 வேணும்'-'மிரட்டும்' ஜெனீலியா!

ராசியில்லாத ராணிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தவர் ஜெனீலியா. அந்த அளவுக்கு அவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போணியாகாத நிலை.
இதன் காரணமாக ஜெனீலியா பக்கம் தமிழில் யாருமே திரும்பிப் பார்க்காமல் இருந்தனர். இதனால் தெலுங்குக்குத் திரும்பினார் ஜெனீலியா.
இந்த நிலையில் ஜெனீலியாவை வைத்து தைரியமாக எடுக்கப்பட்ட படம்தான் சந்தோஷ் சுப்ரமணியம். இப்படம் சூப்பர் ஹிட் படமாகிவிடவே, ராசியில்லாதோர் பட்டியலிலிருந்து ஜெனீலியாவை இப்போது தூக்கி விட்டனர்.
ஜெனீலியாவைத் தேடி இப்போது நிறையப் பட வாய்ப்புகள். ஆனால் இதுவரை ஒரு படமும் புக் ஆகவில்லையாம். என்ன கொடுமை சார் இது என்று விசாரித்தால், ஜெனீலியா கேட்கும் குண்டக்க மண்டக்க சம்பளம்தான் காரணம் என்கிறார்கள்.
தன்னை சந்திக்க வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம், ஒரு கையில் உள்ள மொத்த விரலையும் காட்டி அதுதான் எனது சம்பளம் என்கிறாராம் ஜெனீ.
இவங்களுக்கு இவ்ளோவா என்று அதிர்ச்சி அடையும் தயாரிப்பாளர்கள், சொல்லி அனுப்புவதாக சொல்லி விட்டு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகி விடுகிறார்களாம்.
ஜெனீலியா தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டால் நல்ல பல படங்களில் நடிக்க முடியும். புரிந்து கொண்டால் பிழைத்துக் கொள்வார் என்று திரும்பி வந்தவர்கள் புலம்புகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











