கெட்டவங்க - நல்லவங்க.. ஜெனிலியா

ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த ஜெனிலியா, ஆரம்பத்தில் ராசியில்ாத ராணியாகத்தான் அறியப்பட்டார். ஆனால் லேட்டஸ்டாக வந்த சந்தோஷ் சுப்ரமணியம் ஹிட் ஆகவே, கோலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகி விட்டார்.
அடுத்து, பாலிவுட்டில், அவர் நடித்த ஜானே து ஜானே நா படம் வெளியாகி ஹிட் வரிசையில் சேர்ந்ததால் ஜெனிலியாவுக்கு டபுள் சந்தோஷம்.
தற்போது இட்ஸ் மை லைப் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தனது படங்கள் எப்போதும் ஹிட்தான் என்று கூறும் ஜெனிலியா, சினிமாவில் தனக்கு சில கஷ்டமான அனுபவங்கள் நேர்ந்ததாகவும் கூறுகிறார்.
எனது படங்கள் எல்லாமே ஹிட்தான். ஜானே தூ படம் ஹிட்டாகியுள்ளது. இட்ஸ் மை லைப் படத்திலும் எனக்கு நல்ல கேரக்டர்.
யாரை பற்றியும் புகார் கூறும் அளவுக்கு சினிமாவில் மோசமான அனுபவங்கள் எனக்கு ஏற்படவில்லை. எல்லாமே நன்றாக நடந்தது. இனியும் அப்படியே இருக்கும்.
அறிமுக ஸ்டார்களுக்கு சில கஷ்டங்களும் கசப்பான சம்பவங்களும் ஏற்படலாம். சினிமாவில் மோசமானவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்ன செய்வது? எல்லா துறைகளும் அப்படித்தான். கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நாம் ஒழுங்காக இருந்தால் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்.
என்னோடு என் அம்மா இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறேன். உடன் நடிக்கும் நடிகர்களிடம் கேஷூவலாக பழகுவேன். ஒரு குடும்பம் போல இருப்போம்.
இதுவரை யாரையும் காதலிக்கவும் இல்லை. காதலிக்க நேரில்லை. ஆனால் காதலுக்கு நான் எதிரியல்ல என்கிறார்.
ஜெனிலியா, ஜென்டில்வுமன்யா!


Click it and Unblock the Notifications











