காத்திருக்கும் ரைமா சென்

பழம்பெரும் நடிகை மூன் மூன் சென்னின் மகள்தான் ரைமா சென். இவரது சகோதரி ரியா சென்னும் நடிகைதான். தமிழில் தாஜ்மஹால், குட்லக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரைமா சென் பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது மேரே கவாபான் மெய்ன் ஜோ ஆயே என்ற படத்தில் நடித்துள்ள ரைமா சென், இதுவரை தனக்கே தனக்கான காதலன் கிடைக்கவில்லை என்கிறார்.
மேரே கவாபான் மெய்ன் ஜோ ஆயே படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், எனக்கே எனக்கான கனவு மனிதனை இன்னும் நான் காணவில்லை. அவருக்காக நான் காத்திருக்கிறேன்.
இப்படத்தில் நான் பாடகியாகும் கனவுடன் உள்ள இல்லத்தரசி வேடத்தில் நடித்துள்ளேன். எனது கேரக்டரின் பெயர் மாயா. அனைத்துப் பெண்களையும் இந்த கேரக்டர் கவரும்.
இல்லத்தரசிகள் என்றில்லை. அத்தனைப் பெண்களுக்குமே மனதுக்குள் ஒரு லட்சியம் இருக்கும். ஆனால் அதை நிறைவேற்ற முடியாமல் உள்ளே போட்டுப் புதைத்துக் கொள்பவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்றார் ரைமா.
ரியா சென் என்ன ஆனார் என்று கேட்டால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இப்போது இருவருமே இணைந்து ரிதுபர்னோ கோஷ் படத்தில் நடிக்கவுள்ளோம். அப்படம் ரியாவுக்கு நல்ல பிளாட்பார்ம் ஆக அமையும் என நம்புகிறேன் என்கிறார் ரைமா.


Click it and Unblock the Notifications











