'ஒன்லி ஹோம்லி' - பாவனா

தமிழில் படு பிசியாக நடித்து வந்த பாவனா இப்போது தெலுங்கிலும், மலையாளத்திலும் ரொம்பப் பிசியாக உள்ளார். அதற்காக தமிழையும் கைவிட்டுவிடவில்லை அவர். வினய்யுடன், ஜெயம்கொண்டான், படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சொந்தக் குரலில் பேசி அசத்தியுள்ளாராம் பாவனா.
அதேபோல தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கிளாமர் சைடிலும் சற்றே கவனம் செலுத்தியிருக்கிறாராம். அதேபோல மலையாளத்தில், பிருத்விராஜுடன் ஒரு படம், டுவென்டி டுவென்டி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
3 மொழிகளிலும் பிசியாக இருக்கும் பாவனாவுக்கு இன்று முக்கியமான நாள். அதாவது அவரது பிறந்தநாள். அந்த சந்தோஷத்தில் இருக்கும் பாவனா, படு திருப்திகரமாக தனது திரையுலக வாழ்க்கை போய்க் கொண்டிருப்பதாக சந்தோஷமாக கூறுகிறார்.
எனக்கு நல்ல இயக்குநர்கள் கிடைத்துள்ளனர். யாருமே என்னை இப்படி நடி, அப்படி நடி என்று கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதை நானே கொடுத்து விடுவதால் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை அதிகம்.
எனக்கு ஹோம்லியான ரோல்கள்தான் பொருத்தமாக இருக்கும். அப்படித்தான் இதுவரை நடித்து வந்திருக்கிறேன். எனவே கிளாமர் வேடங்களில் நான் அதிக ஆர்வம் காட்டவில்லை. என்னிடமும் கிளாமர் காட்டியே ஆக வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதும் கிடையாது என்கிறார் பாவனா.
தற்போது மலையாளத்தில் டுவென்டி டுவென்டி படத்தில் பாவனா நடித்துக் கொண்டிருக்கும் கேரக்டரில் முதலில் நடிப்பதாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டதால் பாவனாவைப் போட்டுள்ளனர். அதேசமயத்தில், அவரது கேரக்டரையும் பெரிதாக்கி விட்டார்களாம்.


Click it and Unblock the Notifications