கவுதம் மேனன் படத்தில் இலியானா!

கவுதம் மேனன் இப்போது சிம்பு நடிக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா படம் இயக்குகிறார். த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படம் முடிந்து ரிலீசுக்குத் தயாராகிவிட்டது.
இப்போது புதிய படம் இயக்கும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் கவுதம் மேனன்.
இந்தப் படத்தில் வினய் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இலியானா நடிக்கிறார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் முடிந்தது. கேடி படத்துக்குப் பிறகு இலியானா நடிக்கும் தமிழ் படம் இதுதான்.
இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. காரைக்குடியில் படப்பிடிப்பு நடக்கிறது.


Click it and Unblock the Notifications











