'ஓலே' அம்பாசடர் காத்ரீனா..!

இந்தியாவிலேயே இன்டர்நெட்டில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட நடிகை என்ற பெருமைக்குரியவர் காத்ரீனா. இப்போது சர்வதேசப் புகழ் பெற்ற ஓலே கிரீமின் பிராண்ட் அம்பாசடர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார் காத்ரீனா.
சமீபத்தில் ஓலே நிறுவனத்தின் புதிய வெள்ளை நிற கிரீம் தொடக்க விழா நடந்தது. அதில் அம்பாசடர் ஆக அறிவிக்கப்பட்டார் காத்ரீனா.
இதுகுறித்து காத்ரீனா கூறுகையில், நான் அவ்வளவு சீக்கிரம் பிராண்ட் அம்பாசடர் பொறுப்பை ஏற்க மாட்டேன். என்னை அணுகும் நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரம், நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னர்தான் அதை ஏற்க முடிவு செய்வேன் என்றார்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் நட்சத்திரமாக ஜொலிப்பவர் காத்ரீனா. இதனால்தான் அவரை பிராண்ட் அம்பாசடர் ஆக்க முடிவு செய்ததாம் ஓலே.
கடந்த ஆண்டு நட்சத்திரா வைர நகைகளின் பிராண்ட் அம்பாசடராக இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு காத்ரீனா நியமிக்கப்பட்டார். இந்தியா முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











