காவ்யா மாதவனுக்கு கல்யாணம்

By Staff

Kavya Madhavan
இல்லற ஜோதியில் கலக்கும் மலையாள நடிகைகள் வரிசையில் இப்போது காவ்யா மாதவனும் இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் பணியாற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரை மணக்கிறார் காவ்யா மாதவன். இருவருக்கும் சில தினங்களுக்கு முன் எர்ணாகுளத்தில் ரகசிய நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டது.

மலையாளத்தில் மம்மூட்டியின் அழகிய ராவணன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் காவ்யா மாதவன். தற்போது மலையாளத்தின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் காவ்யா. தமிழில் விக்ரமுடன் காசி,பிரசன்னாவுடன் சாது மிரண்டா, வினயன் இயக்கிய என் மன வானில் போன்ற படங்களில் நடித்தார். இப்போதும் சில தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆனாலும் தமிழில் அவர் எதிர்பார்த்த பிரேக் கிடைக்கவில்லை. எனவே கடந்த சில மாதங்களாகவே காவ்யாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியது.

திருவனந்தபுரம் குமாரபுரத்தை சேர்ந்த சந்திரமோகன் என்பவரது மகன் நிஷ்சல். காவ்யா குடும்பத்தார், நிஷ்சலின் பெற்றோரைச் சந்தித்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் எர்ணாகுளத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது.

நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த நிச்சயதார்த்தம் குறித்து காவ்யாவின் நணன்பர்களுக்குக் கூடத் தெரிவிக்கப்படவில்லை.

மணமகன் நிஷ்சல் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் திரைத்துறைக்குப் புதியவரல்ல. ஆயத்தம், கிழக்குணரும் பகஷி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் இந்தத் திருமணம் நடக்கும் என காவ்யாவின் பெற்றோர் இப்போது அறிவித்துள்ளனர். எனவே இப்போது புதுப்படங்களைத் தவிர்த்துவரும் காவ்யா, கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X