சன்னியுடன் சேரும் லஷ்மி ராய்

கர்நாடகம் தந்த அழகிய நடிகை லஷ்மி ராய். ஆனால் என்னவோ, தமிழில் அவருக்கு பெரிய பிரேக் கிடைக்கவே இல்லை. இதனால் கன்னடம், தமிழ், தெலுங்கு என அலை பாய்ந்து கொண்டிருந்தார்.
தமிழில் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் கூட தமிழில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகை என்ற பெருமை கண்டிப்பாக ராய்க்கு உண்டு.
அந்த அளவுக்கு வாரந்தோறும் ஒரு புது கிசுகிசுவில் சிக்கத் தவறுவதில்லை ராய்.
லேட்டஸ்டாக அவரை டோணியுடன் கோர்த்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட்டுக்குப் போகிறாராம் லஷ்மி ராய். வயதாகிப்போய் விட்ட சன்னி தியோல் மறுபடியும் ஒரு படத்தில் நடிக்க வருகிறார். அவருக்கு ஜோடியாகிறார் லஷ்மி ராய்.
ஏற்கனவே ஆசின், சதா, ஜெனிலியா என தென்னகத்து தேவதைகள் எல்லாம் பாலிவுட்டில் பட்டையைக் கிளப்ப தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் லஷ்மி ராயும் இணைகிறார்.
Comments


Click it and Unblock the Notifications