சின்னத்திரைக்கு ஓகே சொன்ன நதியா!

By Sudha

Nadhiya
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகள் பலரும் முதலில் சின்னத் திரையை வேண்டாவெறுப்பாகப் பார்த்து, பின்னர் அதிலேயே முன்னணி நடிகையாக திகழ்ந்துள்ளனர்.

ராதிகாவில் தொடங்கி, தேவயானி, குஷ்பு, மீனா, நமிதா என இந்தப் பட்டியல் பெரியது.

இவர்கள் அனைவருமே ஒரு நேரத்தில் டிவியில் நடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் காட்டியவர்களே. இவர்களில் நமீதா டிவி ஷோக்களில் கவர்ச்சிகரமான நடுவராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் வரிசையில் புதிதாக சேரவிருக்கும் நடிகை நதியா. எண்பதுகளின் இறுதியில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த இவர் திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.

ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மூலம் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் இவர் போடும் கண்டிஷன்களில் பல தயாரிப்பாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடவேண்டியதாகிவிட்டது.

இப்போது, தமிழில் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. இந்த நேரம் பார்த்து, விஜய் டிவியில் ஒரு 26 வாரத் தொடர் செய்யும் வாய்ப்பு வந்தது. மறுபேச்சின்றி ஒப்புக்கொண்டுள்ளார் நதியா.

இதே நதியாவை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபல தொடரில் நடிக்க அழைத்தபோது, அந்த தயாரிப்பாளரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 'திரும்ப இப்படி கேட்டு இங்கே வராதீங்க' என்று திருப்பி அனுப்பியவர் நதியா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X