தெலுங்கு 'பில்லா'விலும் நமீதா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் ஆன படம் பில்லா. இது கடந்த ஆண்டு அஜீத், நயனதாரா, நமீதா நடிப்பில் ரீமேக் ஆனது. அஜீத்துக்கு பிரேக் கொடுத்தது.
இதையடுத்து பில்லாவை தெலுங்குக்குக் கொண்டு செல்கிறார்கள். இளம் நாயகன் பிரபாஸ், பில்லா வேடம் போடுகிறார்.
நமீதா வேடத்தில் அவரையே புக் செய்து விட்டனராம். தெலுங்கில் ஏற்கனவே நமீதாவுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஆரம்பத்தில் தெலுங்கிலிருந்துதான் தனது கலைச் சேவையை தொடங்கினார் நமீதா.
அன்று முதலே நமீதாவின் கவர்ச்சியில் கிறங்கிக் கிடக்கும் தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்த, நமீதா கேரக்டரில் அவரையே நடிக்க வைக்க தீர்மானித்தனராம்.
நமீதாவுக்கும் இதில் ஏக சந்தோஷம். மீண்டும் தெலுங்கு ரசிகர்களை நேரடி தெலுங்குப் படம் மூலம் சந்திக்கும் திருப்தியில் உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம்.
தமிழிலேயே கவர்ச்சியில் தத்தளிக்க வைத்தவர் நமீதா. தெலுங்கில் கண்டிப்பாக கூடுதல் கவர்ச்சி உண்டு என்பதால் தெலுங்கு ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர் - நமீதாவை தடபுடலாக தரிசிக்க.


Click it and Unblock the Notifications











