மீண்டும் டிவியில் நமிதா

கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் நடுவர்களில் ஒருவராக இடம் பெற்றவர் நமீதா. அவருடன் இடம் பெற்ற மற்ற இரு நடுவர்கள் டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் அவரது தங்கையான டான்ஸ் மாஸ்டர் பிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் நமீதா படு கவர்ச்சிகரமாக வந்தது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. சட்டசபையிலும் இது விவாதப் பொருளானது.
நிகழ்ச்சியின் வெற்றி காரணங்களில் ஒன்றாக ஜொலித்த நமீதா, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலே அதிகபட்ச சம்பளத்தைப் பெற்றாராம்.
ஆனால் தனது டிரஸ் குறித்த சர்ச்சை மற்றும் சம்பளத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக நிகழ்ச்சியிலிருந்து விலகினார் நமீதா. அவரைத் தொடர்ந்து சிம்ரன் இடம் பெற்றார். ஆனால் தற்போது அவரும் இல்லை. பதிலாக, குஷ்புவும், ரம்பாவும் ஜட்ஜ்களாக உள்ளனர்.
இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இதே நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார் நமீதா. அவருடன் நடிகர் ஸ்ரீகாந்த் இன்னொரு நடுவராக இருப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











