»   »  பிகினியில் நமீதா!

பிகினியில் நமீதா!

Subscribe to Oneindia Tamil
Namitha
இதுவரை இல்லாத அளவுக்கு இனிமேல் கவர்ச்சியில் களேபரம் செய்யப் போகிறாராம் நமீதா.அதற்கு அச்சாரமாக இந்திரவிழா படத்தில் பிகினியில் வந்து பின்னியெடுக்கப் போகிறாராம்.

நமீதா நார்மல் காஸ்ட்யூமில் வந்தாலே அது கிளாமராகத்தான் தெரியும். இதில் கிளாமராக வந்தால் எப்படி இருக்கும்? நினைத்தாலே பயந்து வருதுல்ல!

சமீபத்தில் நமீதா, ஷ்ரியா ஆகியோரின் டிரஸ் குறித்து காரசாரமாக விவாதம் நடந்தது. பாமகவினர் நடிகைகள் ஆபாசமாக டிரஸ் போட்டு பொது இடங்களுக்கு வருவதும், டிவி நிகழ்ச்சிகளில் தோன்றுவதையும் கண்டித்தனர்.

ஆனால் அவர்கள் ஆபாசமாக டிரஸ் போடவில்லை என்று அமைச்சர்கள் படு வேகமாக மறுப்பு தெரிவித்து நடிகைகளுக்கு சப்போர்டிவாக பேசினர்.

இந்தநிலையில் பாமகவின் எதிர்ப்பால் யார் பயப்பட்டார்களோ தெரியவில்லை, நிச்சயம் நமீதா பயப்படவே இல்லை என்பது ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த ஹேர் ஆயில் ஒன்றின் அறிமுக விழாவுக்கு வந்த போது தெரிய வந்தது.

படு கவர்ச்சியாக விழாவுக்கு வந்திருந்தார் நமீதா. டைட்டான மஞ்சள் கலர் டாப்ஸில் கவர்ச்சித் திமிறலோடு வந்த நமீதாவைப் பார்த்த அனைவருக்குமே மூச்சு கொஞ்சம் போல அடைத்து சரியாகியிருக்கும். அப்படி ஒரு தினுசாக,வந்திருந்தார் நமீதா.

வெளி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாது, சினிமாவிலும் அதிக கவர்ச்சி காட்டி நடிக்கப் போகிறாராம் நமீதா. எல்லாம், பில்லாவில் நயனதாரா கவர்ச்சி காட்டியதால் எடுத்த முடிவாம்.

இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுக்கு அச்சாரமாக ராஜேஸ்வர் இயக்கத்தில் உருவாகும் இந்திர விழா படத்தில் டூ பீஸ் பிகினியில் ஜிலுஜிலுவென தோன்றப் போகிறாராம் நமீதா.

அமரன், இதயத்தாமரை,கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர்தான் ராஜேஸ்வர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திர விழா மூலம் வருகிறார்.

ஸ்ரீகாந்த் தான் நாயகன். நமீதா ஒரு நாயகி, மாளவிகா இன்னொரு நாயகி.

ஸ்ரீகாந்த் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பூ மற்றும் எட்டப்பன் ஆகியவற்றை முடித்து விட்டு திரும்பியதும் இந்திர விழா கோலாகலமாக தொடங்குகிறதாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil