அம்மாவாகும் நவ்யா நாயர்!

மலையாளத்தில் பிரபலமாகி பின்னர் தமிழில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தவர் நவ்யா நாயர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சந்தோஷ் சிவன் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப்பின் மும்பை வாசியாகிவிட்ட நவ்யா, திருமணத்துக்கு முன் ஒப்புக் கொண்ட ஒரு படத்தை முடித்துத் தர அவ்வப்போது கேரளா வருகிறார்.
ஹரிகுமார் இயக்கும் 'சட்கமயா' என்ற படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து வருகிறார் நவ்யா. இதில் அவர் மனநிலை பாதித்த நோயாளியாக நடிக்கிறார்.
நேற்று படப்பிடிப்புத் தளத்துக்கு வந்ததும் தான் கருவுற்றிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இனிப்பு கொடுத்து பகிர்ந்து கொண்டார் நவ்யா. நவம்பரில் குழந்தைப் பிறக்கும் என்று டாக்டர்கள் தேதி குறித்துள்ளனராம்.
Comments
கர்ப்பம் திருமணம் நவ்யா நாயர் மலையாளப் படம் malayalam actress marriage navya nair pregnancy shooting spot


Click it and Unblock the Notifications