நயனதாராவின் பருந்து!

பத்மகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படம் ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் போகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மலையாளத்திற்கு வருகிறார் நயனதாரா. இப்படத்தில் ஜெயசூர்யா, கலாபவன் மணி ஆகியோரும் உள்ளனர்.
ஜில்லெட் புருஷோத்தமன் என்கிற அடாவடியான, இரும்பு மனம் படைத்த பைனான்சியராக மம்முட்டி நடிக்கவுள்ளார்.
கிரிஷ் புட்டன்சேரியும், வித்யாசாகரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர். ஜூலை மாதம் முதல் வாரம் பருந்து தியேட்டர்களுக்கு வருமாம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயனதாரா மலையாளத்தில் நடிக்கும் படம் என்பதால் அவரது நடிப்பை தரிசிக்க மலையாளத்து ரசிகர்கள் ஆர்வமாகியுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications