ஆலப்புழா, வயநாடு..கோலிவுட்!

இந்தப் பஸ்ஸை விட்டால் அந்த பஸ்தான் என்று கிராமத்தில் கூறுவார்கள். அதேபோல மும்பை நாயகிகளை விட்டால் மலையாளத்து நாயகிகள்தான் என்ற புதுமொழியில் உழன்று கொண்டிருக்கிறது கோலிவுட்.
அந்த வகையில் கோலிவுட்டுக்கு வந்துள்ள லேட்டஸ்ட் மலையாள நாயகி நீனு கார்த்திகா. மீனு கார்த்திகா என்றும் இவரை கூப்பிடுகிறார்கள்.
மெய்யாலுமே பொய் என்ற படத்தில் நடித்துள்ளார் நீனு. சுத்தமான கேரளத்து தேவதை. பிறந்தது ஆலப்புழையாம். வளர்ந்தது வயநாடாம். இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது கொச்சியாம். ஏன் இப்படி ஒரு அலைச்சல் என்று கேட்டால், அப்பாவுக்கு போஸ்டல்ல வேலை, அதான் இப்படி என்கிறார் அழகாக சிரித்தபடி.
பி.காம் வரை படிச்சாராம். அதன் பின்னர் மாடலிங், விளம்பரம் என்று திரும்பியுள்ளார். ஒரு நல்ல நாளில் ஷாஜி கைலாஷ் கண்ணில் பட்டு வைக்க அவரது ரெட் சில்லீஸ் என்ற படத்தில் நடிகையானார். அதன் பின்னர் அப்படியே டிராக் மாறி தெலுங்குக்குத் தாவினார்.
இப்போது தமிழுக்கும் வந்து விட்டார். மீரா ஜாஸ்மின், கோபிகா போல நடிக்க ஆசைப்படுகிறாராம். அதாவது லேசு பாசான கவர்ச்சியுடன், ஸ்டிராங்கான நடிப்பைக் கொடுப்பதுதான் இவரது ஸ்டைலாம்.
பார்க்கலாம், பார்க்கலாம்..


Click it and Unblock the Notifications











