விஷாலும் அண்ணனும் நண்பர்கள்!-ரீமா

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரீமா சென் கூறியதாவது: ஆயிரத்தில் ஒருவன் எனது நடிப்பு வாழ்க்கைக்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் தருவேன்.
இந்தப் படத்தில் என் நடிப்பு மட்டுமல்ல, கவர்ச்சியும் பேசப்படும். 7 நூற்றாண்டுகளில் நடிக்கும் கதை. தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக இயகத்குநர் செல்வராகவன் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கி வருகிறார்.
என்னைப் பற்றி வரும் கிசுகிசுகளுக்கு என்றுமே முக்கியத்துவம் தந்ததில்லை. நானும் விஷாலும் காதலிப்பதாக நீண்ட நாட்களாகக் கூறி வருகிறார்கள். பதில் கூறி எனக்கே அலுத்துவிட்டது.
விஷாலும் அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் எனது நெருங்கிய நண்பர்கள், என்றார்.
ஆயிரத்தில் ஒருவன் முடிந்த பிறகு நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்த ரீமா, விரைவில் ப்ரியதர்ஷன் இய்க்கத்தில் ஒரு இந்திப்படம் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











