தீபிகாவுக்கு வயசு 23

பாலிவுட்டின் புத்தம் புதுக் கனவுக் கன்னிகளில் ஒருவரான தீபிகா படுகோன் தனது 23வது பிறந்த நாளை சந்தடியில்லாமல் மும்பையில் கொண்டாடினார்.
மாடல் அழகியாக இருந்து பாலிவுட்டுக்குள் பாய்ந்தவர் தீபிகா. முன்னாள் பேட்மின்டன் சாம்பியன் பிரகாஷ் படுகோனின் செல்லப் புத்திரி தீபிகா.
நேற்று தீபிகாவுக்கு 23வது பிறந்த நாள். இதையடுத்து மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
தான் நடித்துள்ள சாந்தினி செளக் டூ சைனா என்ற படத்தின் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துள்ளார் தீபிகா. அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ள இப்படம் 16ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான புரோமோ நிகழ்ச்சிகளில் தீபிகா பிசியாக இருக்கிறார்.
படத்தில் தீபிகா டபுள் ரோல் செய்திருக்கிறார். ஆக்ஷனும், நடிப்பும் கூடிய அட்டகாசமான ரோல் இது. இப்படத்துக்காக சண்டைக் காட்சிகளி்ல் நடித்த அனுபவத்தால் குஷியாகிப் போன தீபிகா, தன்னை பாலிவுட்டின பொம்பளை அக்ஷ்ய்குமார் என அழைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார் பெருமையாக.
தந்தை பிரகாஷ் படுகோன், தாயார் உஜ்வாலா ஆகியோருடன் கோவிலுக்கு வந்த தீபிகாவுடன், அவரது 'தோஸ்த்' ரன்பீர் கபூர் வரவில்லை.
ரன்பீர் கபூர், காத்ரீனா கைபுடன், ராஜ்குமார் சந்தோஷியின் அஜப் பிரேம் கி கஜப் கஹானி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாராம். இதனால்தான் அவர் வரவில்லையாம்.
வராவிட்டாலும் கண்டிப்பாக வாழ்த்தியிருப்பார் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











