பத்மப்ரியாவின் 'ஹை ஜம்ப்'

By Staff

Padmapriya
நடிப்பதிலும், கவர்ச்சி காட்டுவதிலும் மட்டுமல்லாமல், இப்போது குதிப்பதிலும் கோலிவுட் ஹீரோயின்களுக்கு இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நமீதா 200 அடி உயர கட்டடத்திலிருந்து குதித்து அனைவரையும் அதிர வைத்தார். அதே பாணியில் இப்போது பத்மபிரியாவும் ஹை ஜம்ப் செய்து ஹார்ட்டை எகிறடித்திருக்கிறார்.

ஆனால் நமீதா குதித்தது கட்டடத்திலிருந்து, பத்து குதித்ததோ, மரத்திலிருந்து.

தவமாய் தவமிருந்து படத்தில் ஹோம்லி டால் ஆக அறிமுகமாகியவர் பத்மபிரியா. முதல் படத்தில் கிடைத்த சிறந்த நடிகை என்ற பெயரை மிருகம் படத்தில் மிரட்டல் நடிப்பைக் கொடுத்து தக்க வைத்துக் கொண்டார்.

மம்முட்டி, சரத்குமார் நடிக்கும் மலையாளத்து பழசிராஜா படத்தில் பத்மபிரியா தற்போது நடித்து வருகிறார். எம்.டி.வாசுதேவன் கதை எழுத ஹரிஹரன் இயக்கி வருகிறார்.

பல பிரச்சனைகளால் 2 ஆண்டுகளாக இந்த படம் சூட்டிங் நடந்து வருகிறது. தற்போது வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு திருப்பதி அருகே உள்ள தலக்கோணம் பகுதியில் நடந்தது. அங்கு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் பத்மபிரியா உயரமான மரத்தில் இருந்து குதித்து சண்டை போட வேண்டும்.

டூப் போட்ரலாம் என அனைவரும் கூறினர். ஆனால் பத்மாவோ அதிரடியாக நானேதான் குதிப்பேன் என்று கூறவே அனைவருக்கும் ஜிலீரானது.

இருந்தாலும் பத்மா குதிப்பதில் பிடிவாதமாக இருந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவரை குதிக்க வைத்தனர். சும்மா சொல்லக் கூடாது, பத்மப்ரியாவின் குதியல் அட்டகாசமாக வந்ததாம்.

நல்லா குதிச்சீங்க என்று எல்லோரும் பாராட்டித் தள்ளி விட்டனராம் பத்மாவை.

இந்த 'ஜம்ப்' நடிப்பிலும் பத்மாவை எம்ப வைக்குமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X