லாரன்ஸ் ஜோடியாக சந்தியா!

அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் வர சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய்யுள்ளார் சந்தியா. சமீபத்தில் பி.வாசுவின் ஆப்தரக்ஷகா கன்னடப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது சந்தியாவுக்கு.
செல்வா இயக்கும் நூற்றுக்கு நூறு படத்தில் வினய்க்கு ஜோடியாக வரும் 5 நாயகிகளில் சந்தியாவும் ஒருவர்.
அடுத்தபடம் சிம்பு தேவன் இயக்கும், 'எறும்புக் கோட்டையில் முரட்டு சிங்கம்' படத்தில் நாயகி வேடமாம். இந்தப் படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார் சந்தியா. எறும்புக் கோட்டை... படத்தில் இவரைத் தவிர பத்மப்ரியா மற்றும் லக்ஷ்மிராய் நடித்தாலும், இவருக்குத்தான் முக்கிய வேடமாம்.
பின்னே... அப்படித்தானே சொல்லணும்!
Comments


Click it and Unblock the Notifications