ரசிகாவுக்கு கல்யாணம்?

ரசிகா என்ற பெயரில் முன்பு நடித்து வந்த சங்கீதா, உயிர் படம் மூலம் ஓவர்நைட்டில் பெரிய ஸ்டாராகி விட்டார். அதற்கு முன்பு வரை கவர்ச்சிகரமான நடிகையாக மட்டுமே அறியப்பட்டிருந்த சங்கீதா, உயிர் படத்தின் மூலம் அட்டகாச நடிகையாகவும் ரசிகர்களைக் கவர்ந்தார்.
உயிர் படத்திற்குப் பின்னர் தனம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சங்கீதா. அந்தப் படம் படு தாமதமாக படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது படம் ரிலீஸாகும் நிலையை நெருங்கி விட்டதாம்.
இப்படத்திலும் வித்தியாசமான அதேசமயம், உயிர் படத்தைப் போலவே விவகாரமான கேரக்டரில் நடித்துள்ளாராம் சங்கீதா.
இந்த நிலையில் சங்கீதாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்துள்ளனராம். மாப்பிள்ளை லோக்கல் அல்ல, வெளிநாட்டுக்காரராம். தனம் ரிலீஸான பின்னர் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளதால், அதுவரை தள்ளிப் போட்டுள்ளனராம்.
தற்போது சினிமாவை விட டிவியில்தான் படு பிசியாக இருக்கிறார் சங்கீதா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வரும் சங்கீதா, அந்தப் பணி தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நிறைவாக சொல்கிறார்.


Click it and Unblock the Notifications











