ஷாம்லியிடம் தெலுங்கு படக்குழு படும் பாடு!

By Staff

Shamili
அஜீத் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லிக்கு முதலில் வாய்ப்பு வந்ததென்னவோ தமிழில்தான். ஆனால் தனது ரேஞ்சுக்கு முதல் படம் தமிழாக இருக்க வேண்டாம் என ஓப்பன் ஸ்டேட்மெண்டு விட்டு தெலுங்குப் பக்கம் தாவினார் ஷாம்லி.

தெலுங்கு இயக்குநர் ஆனந்த் இயக்கும் 'ஓய்' என்ற படத்தில் நடித்துவரும் ஷாம்லி, எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் ஏகப்பட்ட கெட்ட பெயரைச் சம்பாதித்துள்ளாராம்.

காலை 9 மணிக்கு வருவேன்; மாலை 5 மணிக்குள் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு அனுப்பிவிட வேண்டும். கட்டாயம் இரவு நேரத்தில் நடிக்க மாட்டேன். இரவு நேரக் காட்சிகளை பகலிலேயே ஷூட் செய்துவிடுங்கள், என்கிறாராம்.

ஏதாவது சொன்னால் உடனே தந்தைக்கு அல்லது தனயனுக்கு போன் செய்து விவகாரமாக்கிவிடுவதால், பல்லைக் கடித்துக் கொள்கிறார்களாம் யூனிட்டில்.

இந்தப் படத்தில் ஷாம்லிக்கு ஜோடியாக நடிப்பவர் சித்தார்த். அவரே கொஞ்சம் அலட்டல் பார்ட்டிதான். இந்தப் பெண் செய்யும் சேட்டைகளைப் பார்த்து அவரே இப்போது அலறுகிறாராம். 'முடிந்த வரை காம்பினேஷன் சீன் இல்லாமப் பாத்துக்கோப்பா', என்று சித்தார்த்தே கேட்டுக் கொள்ளும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்டதாம்.

ஷாம்லி செய்துவரும் தொடர் டார்ச்சரால், எப்போதடா ஷூட்டிங் முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்களாம் ஓய் பட இயக்குநரும் தயாரிப்பாளரும்.

நடிப்பது முதல் படம் என்றாலும், முன்னணி நாயகிகளுக்கு இணையாக ஷாம்லிக்கு ரூ.20 லட்சம் ப்ளஸ் கன்வேயன்ஸ் வழங்கியுள்ளாராம் தயாரிப்பாளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X