மறுபடியும் ஷெரீன்

துள்ளுவதோ இளமைக்குப் பிறகு ஷெரீனுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு படமும் அமையவில்லை. விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும் ரசிகர்கள் மனதிலும், திரையுலக மனதிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் கன்னடத்திற்கும், இந்திக்கும் போய் பார்த்தால். அங்கு தமிழை விட நிலைமை மோசமாக இருந்ததால் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தார். விளம்பரங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
இடையில் குத்துப் பாட்டுக்களுக்கும் ஆடிப் பார்த்தார். எதுவும் சரிப்பட்டு வராத நிலையில், இப்போது அவருக்கு தமிழில் இரு படங்கள் கிடைத்துள்ளன.
வில் மற்றும் கொம்புத் தேவன் என இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் ஷெரீன். இந்தப் படங்கள் எந்த அளவுக்கு உதவும் என்று ஷெரீனுக்கே இன்னும் டவுட் ஆகத்தான் உள்ளதாம். இருந்தாலும் நம்பிக்கையோடு நடித்துக் கொண்டிருக்கிறாரம்.
நம்பிக்கைதானே வாழ்க்கை!


Click it and Unblock the Notifications











