22-ம் தேதி ஷில்பா கல்யாணம்!

Shilpa Shetty
29 வயது ராஜ் குந்த்ராவை மணக்கிறார் 34 வயது ஷில்பா ஷெட்டி... 22-ந் தேதி திருமணம்.

நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் அவரது காதலர் ராஜ் குந்த்ராவுக்கும் வரும் நவம்பர் 22-ந் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்ற பிறகு பரபரப்பான நடிகையாகி விட்ட ஷில்பாவுக்கும் (வயது 34), ஏற்கெனவே திருமணமான தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும் (வயது 29) நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது.

இந்தக் காதல், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் வரை வந்து விட்டது. தகராறு செய்த முதல் மனைவியையும் சமாளித்து விட்டார் ராஜ் குந்த்ரா.

இப்போது ஷில்பா- ராஜ் குந்த்ரா திருமணம், வருகிற 22-ந் தேதி மும்பை அருகிலுள்ள கண்டலாவில் அமைந்துள்ள ஷில்பா ஷெட்டியின் தோழி கிரண் பாவாவின் பங்களாவில் எளிய முறையில் நடக்கிறது.

இந்தத் திருமணத்துக்கு ஷில்பா மற்றும் ராஜ் குந்த்ரா என இரு தரப்பு குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமணச் சடங்குகள் பஞ்சாபி மற்றும் தென்னிந்திய முறைப்படி (ஷில்பா மங்களூரைச் சேர்ந்தவர்) நடக்கிறது.

24-ந் தேதி ஷில்பாவின் திருமண வரவேற்பு மும்பையில் நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X