பூஜாவுக்கு சிங்கள மாப்பிள்ளை?

இந்திய - இலங்கை கூட்டுத் தயாரிப்பான பூஜா, தமிழ் நடிகையாக பிரபலமானவர். பெங்களூரில் வாசம் புரிந்து வரும் இவரது தந்தை சிங்கள மொழிக்காரர்.
இதனால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டு நடித்து வரும் பூஜா, சமீப காலமாக தமிழ் சினிமாவில் எங்கேயுமே காணவில்லை. இத்தனைக்கும் நான் கடவுள் என்ற நல்ல படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துப் பெயர் பெற்றிருந்தும் கூட அவரைத் தேடி நல்ல வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் கூட பூஜாவைக் காண முடியவில்லை.
விசாரித்துப் பார்த்தபோது பூஜா வீட்டில் புகைச்சல் என்று தெரிய வந்த்து. பூஜா வீட்டில் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் பூஜாவுக்கு உடன்பாடு இல்லையாம். இன்னும் சில காலம் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். கல்யாணத்திற்கு இப்போது அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டிலோ ஒரு சிங்களத் தொழிலதிபரைப் பார்த்து முடிவு செய்து இவர்தான் மாப்பிள்ளை என்று கூறி விட்டார்களாம்.
ஆனால் பூஜா அதை ஏற்க மறுத்து வருவதால், வீட்டில் புகைச்சலாகியுள்ளதாம். இதனால்தான் பூஜாவை எங்கும் காண முடியவில்லை.
இந்தியாவில்தான் பூஜாவைக் காண முடியவில்லை என்றாலும் கூட சிங்களத்தில் அவர் நடித்தக் கொண்டுதான் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











